×

இந்திய வரைபட வடிவில் நின்று மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு

கோவை, ஏப். 11: கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து இந்திய வரைபட வடிவில் நின்று நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கலந்துகொண்டு முதல் வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், கல்லூரியில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து அறியும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மைக்கப்பட்டு இருந்தது. இதனை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

The post இந்திய வரைபட வடிவில் நின்று மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Saravanampatti ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...